மூன்று
[ 3 ]
அன்று காலை ஜொள் மீண்டும் தனது தகவல்களை காந்தருவம் நாட்டு அரச தலைவர் பற்றீசாவுக்கு அனுப்புவதற்காக தகவல் பரிவர்த்தனை நிலையத்திற்கு சென்றான். ஜொள் தலைவர் பற்றீசாவை முதன்முதலாக தொடர்புகொண்டு சில நாட்களே ஆகி இருக்கலாம். ஒவ்வொரு தடவையும் தொலைநகல் ஊடாக பற்றீசாவை தொடர்பு கொண்டபோது மீண்டும் மீண்டும் தான் உடனடியாக அவரை நேரில் சந்திக்கவேண்டும் என்று அவன் கேட்டு இருந்தான். ஏற்கனவே அவன் காந்தருவம் நாட்டின் அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நேரடியாகச்சென்று பற்றீசாவை சந்திப்பதற்கு முயற்சி [...]
J Zero L Org