ஐந்து
[ 5 ]
கடந்ததினம் முதல் தடவையாக கலாநிதி ரசலினை சந்தித்து, அவருக்கு அதிர்ச்சியை கொடுத்த ஜொள் மறுநாள் காலை மீண்டும் அவரை சந்திப்பதற்காக அவர் இல்லத்திற்கு சென்றான். ஜொள் குடும்பத்தினருடன் வசிக்கும் தற்காலிக வாடகை குடியிருப்பு கலாநிதி ரசலின் நிரந்தர இல்லத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீற்றர் தூரத்தில் இருந்தது. பல தடவைகள் முழுமையாகவும், பகுதியாகவும் ஜொள் அந்த நீண்ட தூரத்தை கால்நடையாகவே சென்று அடைந்தான். சிலவேளைகளில் அவன் தனது பல்கலைக்கழகத்திற்கு பேருந்தில் சென்று, பின்னர் அங்கிருந்து கால்நடையாக கலாநிதி [...]
J Zero L Org