இரண்டு
[ 2 ]
ஜொள் கலாநிதி ரசலிடம் அதிக மதிப்பும், மரியாதையும் வைத்து இருந்தான். ஆயினும், அவனது பேரறிவின் வேகமும், வீச்சும் கலாநிதி ரசலின் கட்டுப்பாட்டின்கீழ் ஜொள்ளை இயங்க விடவில்லை. மாறாக, கலாநிதி ரசலை ஜொள்ளின் பேரறிவு கட்டுப்படுத்தத் தொடங்கியது. தனது கண்டறிதல்களை நிரூபிக்க ஜொள் E = mc2 எனப்படுகின்ற பிரபலமான விஞ்ஞான சூத்திரத்தை தேர்ந்தெடுத்தமைக்கு பல காரணங்கள் இருந்தன. உலகெங்கும் அறிஞர்களிடையே அறியப்பட்ட E = mc2 எனப்படும் பெளதிகவியல் சூத்திரம் மனிதநாகரீக வளர்ச்சியின் படிமுறையில் முக்கியமானதொரு மைக்கல்லாக [...]
J Zero L Org