ஆறு
[ 6 ]
ஜொள்ளிற்கு எப்படி அந்த இடத்திற்கு போகவேண்டும், குறிப்பிட்ட அந்த நேரத்தில் அங்கு நிற்கவேண்டும் என்று தெரிந்தது? அவனிடம் தொலைபேசி இல்லை, இதர தொடர்பு சாதனங்களும் இல்லை. எப்போதாவது சில சமயம் ஒரு சில நண்பர்கள், உறவினர்கள் வருகை தவிர, அவன் இல்லத்திற்கு ஒருவரும் அவனை தேடி வருவதும் இல்லை. இன்று காலை அவசர அவசரமாக திடீரென எங்கோ புறப்படுவதற்கு ஜொள் தயாராகினான். சீருடை போன்று பயன்படுத்தும் வழமையாக தான் அணிகின்ற வெள்ளை மேலாடையையும், கறுப்பு அல்லது சாம்பல் [...]
J Zero L Org