ஓர் நாட்டின் அரச அதிபர் தனது நாட்டில் பல்வேறு விடயங்களை முறையாக கையாள்வதற்கு அவருக்கு உறுதுணையாக வெவ்வேறு மட்டங்களில் செயற்படும் செயலாளர்கள், நிபுணர்கள் போன்றோர் இருப்பார்கள். ஓர் சத்திர சிகிச்சை நிபுணர் தனது சத்திர சிகிச்சையில் பல்வேறு விடயங்களை முறையாக கையாள்வதற்கு அவருக்கு உறுதுணையாக மருத்துவர் குழு, தாதிகள் போன்றோர் இருப்பார்கள். ஓர் நீதிபதி தனது நீதிமன்றத்தில் பல்வேறு விடயங்ளை முறையாக கையாள்வதற்கு அவருக்கு உறுதுணையாக காவல்துறையினர், வழக்கறிஞர்கள் போன்றோர் இருப்பார்கள்.
கணணி-மனிதன், சார்பு உலகம், மற்றும் இதர பல விடயங்கள் சம்மந்தமாக தத்துவ விசாரணைகள் மேற்கொள்கின்ற, விளக்கங்கள் கொடுக்கின்ற அறிஞன் ஜொள்ளிற்கு யார் உறுதுணையாக இருந்தார்கள்? அவனது பலம் என்ன?
தனது அறிவியல் கண்டறிதல்களை நிகழ்த்திய காலப்பகுதியில் ஜொள் சுமார் பதினைந்து சிறுவர்களுக்கு ஆசானாக விளங்கினான். இவ்வாறே, குறிப்பிட்ட பதினைந்து சிறுவர்களும் ஜொள்ளிற்கு ஆசான்களாக விளங்கினார்கள். ஜொள்ளிடம் கல்வி கற்ற மிக இளம் வயது மாணவிக்கு வயது நான்கு. அதாவது, ஜொள்ளிற்கு கல்வி கற்பித்த மிக இளம் வயது ஆசானுக்கு வயது நான்கு. அவனிடம் கல்வி கற்ற அதிக வயதுடைய மாணவிக்கு வயது சுமார் பதினான்கு.
சிறுவர்களிற்கு அவர்களது இல்லங்களிற்கு சென்று கல்வி புகட்டுவது ஜொள்ளின் பணியாக இருந்தது. உண்மையில் அவர்களிற்கு அவன் மிக நன்றாக கல்வி கற்பித்தான். அதைவிட சுவாரசியமான விடயம் யாதெனில், அவன் பலப்பல விடயங்களை சிறுவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டான். ஜொள் வருகை தந்த குறிப்பிட்ட இல்லங்கள் அறிவியல் ஆய்வு கூடங்களாகவே விளங்கின.
சிறுவர்களுக்கு கல்வி புகட்டியதோடு மட்டும் அல்லாது, ஜொள் தானும் ஓர் சிறுவனாகி அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தான். சார்பு உலகம், கணணி-மனிதன் போன்ற பல கோட்பாடுகளை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படை சிந்தனைகளை அவன் சிறுவர்களுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்த சமயமே கண்டறிந்தான்.
சிறுவர்களுடன் தொடர்பாடலில் ஈடுபடுகின்றபோது பல்வேறு அடுக்குகளினால் அமையப்பெற்ற சூக்கும உலகங்கள் சம்மந்தமாக பல அறிவியல் அனுபவங்களையும் ஜொள் பெற்றுக் கொண்டான். சிறுவர்களிற்கு கல்வி கற்பிக்கும்போது பெறுகின்ற வெவ்வேறு அனுபவங்களை, சிந்தனைகளை அவன் தனது அந்தரங்க ஆராய்ச்சி கையேட்டில் குறித்தும் வைத்தான்.
பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளை “புத்திக்கூர்மை பொறி – Intelligent Trap” அதிக அளவில் பாதிப்பதில்லை என ஜொள் அறிந்து கொண்டான். அதாவது, பெரியவர்களை விட, குழந்தைகள் பேரறிவை பெற்றுக் கொள்வது ஒப்பீட்டளவில் இலகுவான காரியம் என்று ஜொள் கருதினான்.
பெரியவர்களிடம் காணப்படும் “விசய ஞானம்” காரணமாக அவர்களினால் அதிகளவான விடயங்களை இலகுவில் “அலங்காரம்” செய்து, அழகிய “சொற் கோர்வைகளில்” சரளமாக எழுதுவது, பேசுவது சாத்தியப்படுவதாகவும், குழந்தைகளிடம் காணப்படும் “விசய ஞான பற்றாக்குறை” காரணமாக அவர்களினால் சார்பு உலகத்தை தரிசிக்கக் கூடியதாக இருந்தாலும், அதை எழுத்தில், சொற்களில் விபரிக்கும் திறன் இல்லாதவர்களாக இருப்பதாகவும் ஜொள் கருதினான். இதுபோலவே, யதார்த்த உலகத்தை கட்டுப்படுத்தும் பல்வேறு அடுக்குகளில் அமைந்த சூக்கும உலகங்களை குழந்தைகள் உணர்ந்து இருந்தாலும், அவை சம்மந்தமான அனுபவங்களை சொற்களில் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் ஆற்றல் அற்றவர்களாக அவர்கள் காணப்படுவதாகவும் ஜொள் கருதினான்.
தனது அறிவியல் கண்டறிதல்களை மேற்கொண்ட வேளையில் குழந்தைகளின் பேரறிவு மூலம் பல சூக்குமமான விடயங்களை ஜொள் அறிந்துகொண்டான். ஜொள்ளின் பேரறிவும், குழந்தைகளின் பேரறிவும் ஒரே வலைப்பின்னலில் இணைக்கப்பட்டு இருந்தன.
தினமும், ஜொள்ளின் வருகைக்காக சிறுவர்கள் காத்து இருந்தார்கள். ஜொள் கல்வி புகட்டுகின்ற பாணியை அவர்கள் மிகவும் விரும்பினார்கள். ஜொள்ளுடன் தொடர்பாடலில் ஈடுபட்ட சமயத்தில் சூக்குமமான சில விடயங்களை உணர்ந்தபோது, ஜொள்ளின் மாணவன் ஒருவன் இவ்வாறு தனக்குள் கூறி மகிழ்ந்து கொண்டான்:
Yeah, I got some magical powers!
ஆஹா.. எனக்கு சில மாயா ஜால சக்திகள் கிடைத்துவிட்டன; இவ்வாறு கூறி மகிழ்ந்தான்.
‘ஜொள் என்ன செய்கின்றான்’ என்கின்ற விரிவான பல விடயங்கள் காந்தருவம் நாட்டு அரச தலைவர் பற்றீசாவுக்கு தெரிந்து இருக்கவில்லை. ‘ஜொள் என்ன செய்கின்றான்’ என்கின்ற விரிவான பல விடயங்கள் கலாநிதி ரசலுக்கு தெரிந்து இருக்கவில்லை. ‘ஜொள் என்ன செய்கின்றான்’ என்கின்ற விரிவான பல விடயங்கள் அவனது குடும்பத்தினருக்கு தெரிந்து இருக்கவில்லை. ‘ஜொள் என்ன செய்கின்றான்’ என்கின்ற விரிவான பல விடயங்கள் மதபீடாதிபதிகளுக்கு தெரிந்து இருக்கவில்லை. ஆயினும், அவை பற்றி விலாவாரியாக, விரிவான பல விடயங்களை ஜொள்ளின் கூட்டாளிகளான மாணவர்கள் மிக நன்றாக அறிந்து வைத்து இருந்தார்கள்.
தனது மாணவர்களுடன் ஜொள் உளம் திறந்து பல விடயங்களை பரிமாறிக் கொண்டான். குழந்தைகளுக்கு புரியக்கூடிய மொழியில் அவன் தனது அறிவியல் கண்டறிதல்கள் பற்றிய விபரங்களை குட்டிக்குட்டி கதைகளாக கூறினான். ஜொள்ளின் அறிவியல் கண்டறிதல்களை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ‘கலாநிதி ரசலின் அங்கீகாரத்திற்காக ஜொள் காத்திருக்க தேவையில்லை’ என்றும் அவனுக்கு அவர்கள் அறிவுரை சொன்னார்கள். ஜொள்ளின் அறிவியல் கண்டறிதல்களுக்கான முதலாவது சமூக அங்கீகாரத்தை சிறுவர்களாக விளங்கிய அவனது மாணவர்களே வழங்கினார்கள்.
தனது அறிவியல் கண்டறிதல்களை மேற்கொண்ட சமயத்தில் அவற்றை முதன் முறையாக தனது மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அவர்களிடம் ஜொள் ஓர் வாக்குறுதி வாங்கினான்:
எனக்கு நீங்கள் செய்கிற உதவி என்ன என்றால்.. நான் சொல்லும் வரைக்கும் நீங்கள் இந்த விசயங்களை வேற ஒருத்தருக்கும் சொல்லக்கூடாது.
பெரியவர்களை விட குழந்தைகளுடன் உளம் திறந்து பேசுவதையே ஜொள் அதிகளவில் விரும்பி இருந்தான். பெரியவர்களுடன் தனது சிந்தனைகளை பரிமாறிக் கொள்வதைவிட குழந்தைகளுடன் தனது சிந்தனைகளை பரிமாறிக் கொள்வதையே அவன் அதிகளவில் விரும்பி இருந்தான். பெரியவர்களை விட குழந்தைகளையே அவன் அதிகளவில் நம்பினான். பெரியவர்களை விட குழந்தைகளையே அவன் அதிகளவில் நம்பிக்கைக்கு உரியவர்களாக – Trust Worthy கருதினான்.
“குழந்தைகள் நெருப்பு சுடும் என்று அறிந்தால் நெருப்பினுள் கையை வைக்க மாட்டார்கள். பெரியவர்கள் நெருப்பு சுடும் என்று அறிந்தும் தேவைப்படும் சமயங்களில் மற்றவர்களை நெருப்பினுள் தள்ளி விடுவதற்கு தயங்க மாட்டார்கள்”; இவ்வாறு ஜொள் நினைத்தான்.
ஒப்பீட்டளவில் பெரியவர்கள் குழந்தைகளை விட அதிகளவில் புத்திக்கூர்மை பொறியின் கட்டுப்பாட்டின் கீழ் அகப்பட்டு இயங்குவதனால், பெரியவர்களினால் பிரச்சனைகளில் இருந்து சுமுகமாக விடுபடுவது மிகவும் கடினமாக உள்ளதாக ஜொள் நினைத்தான். மறுபுறத்தில், குழந்தைகள் புத்திக்கூர்மை பொறியின் ஆதிக்கத்தில் இருந்து பெருமளவு விடுவிக்கப்பட்டு காணப்படுவதனால் ஓர் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை காண்பிக்கும்போது, அதை பயன்படுத்தி அவர்களினால் இலகுவாக பிரச்சினைகளில் இருந்து சுமுகமாக விடுபட முடியும் என்றும் ஜொள் கருதினான்.
மேலும், மற்றவர்களை நம்புவது, மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக தொழிற்படுவது போன்ற விடயங்களில் பெரியவர்களை விட குழந்தைகள் பல மடங்குகள் தேறி உள்ளதாக ஜொள் கருதினான்.
மேற்கண்ட காரணங்களினாலேயே ஜொள் “காந்தருவம் நாட்டின் இனப்பூசலை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் எப்படி ஏற்படுத்துவது” என்பது சம்மந்தமாக உருவாக்கிய “அதிகார பகிர்வு திட்டம் – Devolution Package” பற்றி, அதன் அடிப்படை அம்சங்களை பற்றி அவனது மாணவர்களிடம் விபரித்தபோது அந்த திட்டத்திற்கு தமது உற்சாகமான பாராட்டுக்களை மாணவர்கள் தெரிவித்தார்களா?
ஜொள் கலாநிதி ரசலை தனது வாழ்வில் சந்தித்து இருக்காவிட்டால் அவனது அறிவியல் கண்டறிதல்களை சமூக அங்கீகாரம் பெறக்கூடிய நிலைக்கு கொண்டு சென்று இருக்க முடியாது. ஜொள் தனது வாழ்வில் அன்புக்கும், நம்பிக்கைக்குமுரிய மாணவர்களை சந்தித்து இருக்காவிட்டால் அவனது அறிவியல் கண்டறிதல்களே நிகழ்ந்து இருக்க மாட்டாது.
J Zero L Org