காந்தருவம் நாட்டில் ஜொள் புதினமான பல நடவடிக்கைகளை செய்து கொண்டு இருக்கின்றானே! இவைபற்றி காந்தருவம் நாட்டு செய்தி ஊடகங்கள் எவ்வாறான பிரதிபலிப்பை வெளிப்படுத்தின? அவனை அவை காட்டிக் கொடுக்கவில்லையா? அவனுக்கு அவை பிரச்சனைகளை ஏற்படுத்தவில்லையா?
கலாநிதி ரசல், அரச தலைவர் பற்றீசா ஆகியோருடன் தகவல்களை பரிமாறிய காலத்தில், காந்தருவம் நாட்டின் குறிப்பிட்ட சில ஊடகங்களுடன் மட்டும் ஜொள் தொடர்பை ஏற்படுத்தி இருந்தான். ஊடகங்களுடனான ஜொள்ளின் தொடர்பாடல்கள் மிகவும் நகைச்சுவையான முறையில் அமைந்து காணப்பட்டன. இதனால் அவ்வூடகங்களும் மறைமுகமாக, குறியீட்டு முறையின் அடிப்படையில் மட்டுமே ஜொள் பற்றிய தகவல்களை வழங்கின.
காந்தருவம் நாட்டின் தேசிய வானொலிக்கு அனுப்பியதொரு மடலில் ஜொள் தனது கண்டறிதல்கள் பற்றி ஏறக்குறைய கீழ்வருமாறு நகைச்சுவையாக விபரித்து அனுப்பினான்:
[ From ] சேருமிடம்: … [ ஜொள்ளின் முகவரி ] [ வருவது தென்றல் ]
[ To ] போகுமிடம்: … [ பிரபல அறிவிப்பாளர் ஒருவரின் பெயர் ] [ தென்றலை தருபவர் ]
விடயம்: தென்றல் வீசுவதற்கான விதி
ஈ = ம் சீச்சீ
ஈ , ம், சீச்சீ : சூறாவளி
= : தென்றல்
அதாவது, “Law for Spring”, “E = mc2” என்பவற்றை தனது தாய்மொழியில் “தென்றல் வீசுவதற்கான விதி”, “ஈ = ம் சீச்சீ” என நகைச்சுவையாக குறிப்பிட்டு இருந்தான்.
தனது கண்டறிதல்களை கலாநிதி ரசலுடன் பகிர்ந்த காலத்தில், தனது தாய்மொழியில் எதேச்சையாக பன்னிரண்டு கவிதைகளை வடித்து இரண்டு வெவ்வேறு ஊடகங்களிற்கு மாறி, மாறி அனுப்பினான். ஒவ்வொரு கவிதையையும் எதேச்சையாக தெரிவு செய்யப்பட்ட ஒரு ஊடகத்திற்கு மாத்திரமே வழங்கினான். அதாவது, ஒரேநேரத்தில் ஒரேமாதிரியான கவிதையை அவன் இரண்டு வெவ்வேறு ஊடகங்களிற்கு வழங்கவில்லை.
வெவ்வேறு காலங்களில் தனது உள்ளத்து உணர்வுகளை தாய்மொழியில் வெளிப்படுத்துவதற்கு ஜொள் கவிதைகளை மாத்திரமே ஒரேயொரு பிரதான வழிமுறையாக பயன்படுத்தினான். ஜொள்ளினால் படைக்கப்பட்ட ஒவ்வொரு கவிதையிலும் அவனது உள்ளத்து உணர்வுப் பகிர்வுகள் கீழ்வரும் அம்சங்களின் அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டன:
எடுவை: அன்பு
தொடுவை: சந்தோசம்
+++
எடுவை: வீரம்
தொடுவை: சோகம்
+++
எடுவை: தென்றல்
தொடுவை: பூக்கள்
+++
எடுவை: மக்கள்
தொடுவை: விக்கல்
+++
எடுவை: வெட்கம்
தொடுவை: கும்மாளம்
+++
எடுவை: துணிவு
தொடுவை: பணிவு
+++
எடுவை: நீதி
தொடுவை: பீதி
+++
எடுவை: இதயம்
தொடுவை: உதயம்
+++
எடுவை: போதனை
தொடுவை: வேதனை
+++
எடுவை: நாணம்
தொடுவை: சாணம்
+++
எடுவை: நிலவு
தொடுவை: இரவு
+++
எடுவை: கூந்தல்
தொடுவை: ஊஞ்சல்
எதேச்சையாக, கற்பனை உலகில் திளைத்து உருவாக்கப்பட்ட மேற்கண்ட கவிதைகளில் இசையை அவன் பன்னிரண்டு பிரதான பிரிவுகளாக வகுத்து இருந்தான்.
உண்மையில் இசையை நாங்கள் பன்னிரண்டு பிரதான பிரிவுகளில் வகுக்க முடியுமா?
இங்கு கூறப்படவேண்டிய மிக முக்கிய விடயம்: ஜொள் எதேச்சையாக, கற்பனை உலகில் திளைத்து எழுதிய, ஒவ்வொரு கவிதைகளிலும் கூறப்பட்ட விடயங்கள் ஒவ்வொன்றும் ஏக காலத்தில் நடைமுறை உண்மைகளாக, நிதர்சனமாக காந்தருவம் நாட்டில் நடந்தேறின.
ஓர் கவிதையில் மழையைப் பற்றி கீழ்வருமாறு நகைச்சுவையாக தெரிவித்தான். அப்போது ஏக காலத்தில் அவன் குடியிருந்த இடத்தில் மழை பெய்தது:
நகைப்பு நகைப்பாகி நகைப்பூ மாற
உகைப்பாய் பெய்யும் மழை!
எதேச்சையாக, கற்பனை உலகில் திளைத்தவாறு, பல்வேறு விதமான அவலங்களை தெரிவித்து, ஜொள் வெவ்வேறு காலப்பகுதிகளில் கவிதைகள் வரைந்தான். அப்போது, ஏககாலத்தில் கவிதைகளில் விபரிக்கப்பட்ட அவலங்கள் காந்தருவம் நாட்டில் நிதர்சனமாக நடந்தேறின.
கவிதைகளை ஜொள் எதேச்சையாக படைத்தான். அவற்றை தபாலில் மட்டுமே அனுப்பினான். எதேச்சையாக படைக்கப்பட்ட அவனது கவிதைகளில் கூறப்பட்ட சம்பவங்கள் ஏக காலத்திலேயே எதேச்சையாக காந்தருவம் நாட்டில் – யதார்த்த உலகில் நடந்தேறின. அதாவது, ஜொள் சார்பு உலகத்தை எதேச்சையாக வெவ்வேறு காலப்பகுதிகளில் தனது தாய்மொழியில் படைக்கப்பட்ட கவிதைகள் மூலமாகவும், அப்போது நேரடியாக நடந்தேறிய உண்மைச் சம்பவங்கள் மூலம் நிரூபித்து இருந்தான்.
இறுதி இரண்டு கவிதைகளும் வடிக்கப்பட்ட காலத்தில் ஓர் துயர் மிகுந்த சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவம் ஜொள்ளிற்கு பேரதிர்ச்சியை, வேதனையை ஏற்படுத்தி இருந்தது.
“எடுவை: நிலவு, தொடுவை: இரவு”, “எடுவை: கூந்தல், தொடுவை: ஊஞ்சல்” எனும் கருப்பொருட்களில் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் தொடர்ச்சியாக கவிதைகள் வடிக்கப்பட்ட ஏக காலத்தில் அவன் அடிக்கடி விரும்பிச் செல்கின்ற ஓர் இல்லத்திற்கு அருகில் வசித்த ஓர் சிறுமிக்கு எதிர்பாராத விபத்து நேர்ந்து மரணம் சம்பவித்து இருந்தது.
குறிப்பிட்ட இரண்டு கவிதைகளையும் எதேச்சையாக படைத்தபோது, அவன் விரும்பிச் செல்கின்ற இல்லத்தில் வாழ்கின்ற அன்பு உறவுகள் பற்றிய பல்வேறு விடயங்களையே அந்தக் கவிதைகளில் அவன் குறிகாட்டி எழுதி இருந்தான். “எடுவை: நிலவு, தொடுவை: இரவு” என படைக்கப்பட்ட கவிதையை தபால் உறையினுள் வைத்து முகவரியிட்டபோது, ஆரம்பத்தில் “To: Little Rosemary” என எழுதியபின், மீண்டும் எதேச்சையாக தனது தாய்மொழியில் தொடர்பாடல் செய்கின்ற இரண்டாவது ஊடகத்தின் முகவரிக்கு அதை மாற்றி இருந்தான். “To: Little Rosemary” என அவன் தான் அடிக்கடி விரும்பி செல்கின்ற இல்லத்தில் வாழ்கின்ற ஓர் பெண்ணையே அங்கு குறிகாட்டி இருந்தான்.
எதேச்சையாக, கற்பனை உலகில் திளைத்தவாறு ஜொள் படைத்த கவிதைகளில் கூறப்பட்ட விடயங்கள் எவ்வாறு யதார்த்த உலகில் ஏக காலத்தில் நடந்தேறின? எழுத்துகளிற்கும் [ Letters ] யதார்த்த உலகத்தை கட்டுப்படுத்தும் பல்வேறு அடுக்குகளினால் அமைந்த சூக்கும உலகங்களிற்கும் தொடர்புகள் இருக்கின்றதா? எழுத்துகளிற்கு வலிமை – சக்தி இருக்கின்றதா?
ஜொள் எவருக்கும் தீங்கு செய்ய நினைக்கவில்லை. இப்படி நடக்கவேண்டும் என்று நினைத்து அவன் கவிதைகளை படைக்கவில்லை. எதேச்சையாக தனது உள்ளத்து உணர்வுகளை தெரிவித்தான். அவன் கவிதைகளை படைத்தபோது தனது கவிதைகளில் கூறுகின்ற விடயங்கள் யதார்த்த உலகில் நிதர்சனமாக நடந்தேற வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆயினும், யதார்த்த உலகில் ஏககாலத்தில் நடைபெறும் சம்பவங்களுடன் ஜொள்ளின் கவிதைகளில் பேசப்படும் விடயங்கள் நேரடியாக ஒத்துப் போயின. எவ்வாறு?
யதார்த்த வாழ்வில் நாங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு எழுத்திற்கும், சொல்லிற்கும், சொற் பதங்களிற்கும் சூக்கும உலகங்களில் வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கின்றனவா? இதன் அடிப்படையிலேயே சூக்கும உலகங்கள் யதார்த்த உலகத்தை கட்டுப்படுத்துகின்றனவா?
ஓர் செய்மதி பூமியின் தகவல்களை ஓரிடத்தில் இருந்து பெற்று, இன்னோர் இடத்திற்கு வழங்குவதுபோல் ஜொள்ளும் சார்பு உலகத்தை பூரணமாக தரிசிக்கின்ற ஓர் கணணி-மனிதனாக தொழிற்படுகின்றானா? இந்த ஆற்றல் அவனுக்கு எப்படி கிடைத்தது?
இதை எவ்வாறு உங்களுக்கு விளக்கலாம்?
நீங்கள் ஓர் தெருவில் வாகனத்தில் சென்றுகொண்டு இருக்கின்றீர்கள் என்று வைப்போம். தரையில், வாகனத்தில் செல்லும்போது ஓர் குறிப்பிட்ட அளவுக்கு – மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரமே உங்களால் காட்சிகளை பார்க்கக் கூடியதாக இருக்கும். அதேசமயம், ஆகாயத்தில், வானவூர்தியில் நீங்கள் பயணிக்கும்போது உங்களால் மிகப்பெரிய - பரந்தளவு – விரிவான காட்சிகளை பார்க்கக் கூடியதாக இருக்கும்.
சிற்றறிவு, பேரறிவு ஆகியவற்றின் ஆற்றல்களும் ஏறக்குறைய இவ்வாறு இருப்பதாக ஜொள் கருதினான். அதாவது, சிற்றறிவை தரையில் ஊர்கின்ற வாகனமாகவும், பேரறிவை ஆகாயத்தில் பறக்கின்ற வானவூர்தியாகவும் கூறலாமா?
அரச தலைவர் பற்றீசாவை தொடர்புகொண்ட சமயம் ஜொள் மீண்டும், மீண்டும் ஓர் விடயத்தை அவரிடம் வலியுறுத்தி கேட்டு இருந்தான். தான் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும்வரை தனது கண்டறிதல்கள் பற்றிய விடயங்களை எக்காரணம் கொண்டும் வெளியில் பொதுமக்களிற்கு கசிய விடக்கூடாது என்பதாக அவனது உருக்கமான வேண்டுகோள் அமைந்து இருந்தது:
Please, Don’t upset me!
அதாவது, “தயவுசெய்து என்னை அதிர்ச்சி அடையச் செய்ய வேண்டாம்” எனும் தொனிப் பொருளில் அவனது வேண்டுகோள் காணப்பட்டது.
“புத்திக்கூர்மை பொறியினுள் – Intelligent Trap”அகப்பட்டுள்ள மக்களிடம் தனது அறிவியல் கண்டறிதல்களை சரியான முறையில் சேர்ப்பிப்பதற்கு பல சிறப்பான ஏற்பாடுகள், நுட்பங்கள் கையாளப்படவேண்டும் என்று ஜொள் கருதினான். தவறான முறையில் - தவறான ரூபத்தில் மக்களிடம் வெளிப்படுத்தப்படுகின்ற செய்திகள் நன்மைகளுக்கு பதிலாக கடும் தீமைகளை ஏற்படுத்தி, பலவித குழப்பங்களுக்கு வழி சமைக்கும் என ஜொள் அஞ்சினான்.
J Zero L Org